Store
  Store
  Store
  Store
  Store
  Store

நீ இன்னும் அப்படியே இருக்கிறாய்




















மூங்கில் காட்டில்
ஓசைவரும் என்பார்கள்
நீ மூங்கல் நாற்காலியில்
பூவாய் மலர்ந்திருந்தாய்
உன்னைப் முதலில்
அப்படித்தான் பார்த்தேன்

அந்தக்காட்சியை எனது
விரல்கள் ஓவியமாய் வரைந்தன
இன்று
கையில் இருப்பது
உன்நினைவும் ஓவியமும்தான்

அந்த ஓவியத்தில்
வெகு நாட்களுக்கு பிறகு
உன்னைக் கண்டேன்
உன்
நீல விழிகள்
சிவந்த அதரங்கள்
கூரிய நாசி
அப்படியே இருக்றது


உன்
விரல்களும்
நகங்களும்
அதில் முகம் பார்க்கும்
நிலவும் அப்படியே இருக்கிறது

வாழைக் குறுத்தில்
குங்குமத்தை பூசிய
உன்
பிஞ்சி உள்ளங் கால்களும்
அப்படியே இருக்கிறது
பூ மலரும்
ஓசையையும்
அதிர்ச்சியாக்கும்
உன் யாழ் குரல்
இன்னும்
அப்படியே இருக்கிறது


நீ
நடந்து செல்லும் போது
கடந்து செல்லும்
தாமரைப்பூ வாசமும்

இன்னும்
அப்படியே இருக்கிறது


மோகத்தைக் கொல்லும்
உன் பார்வையும்
காமத்தை வெல்லும்
உன்னசைவும்

இன்னும்
அப்படியே இருக்கிறது


நான் மட்டும் தான்
நரை விழுந்து கூன் ஒடிந்து
கண்களில் குழி விழுந்து
மாரிக் கிடக்கிறேன்


வலுவான என் கைகள்
ரயில் சக்கரம் போல
தடதடக்கிறது
என்கால்களும்
குடிகாரன் போல் தள்ளாடுகிறது
இமைகள் பிரியவும்
உதடுகள் அசையவும் மறுக்கின்றன
மழை இல்லாமல்
வெடித்துக் கிடக்கும் நிலம் போல
கால தேவன்
என்னுடலெங்கும் கோடு வரைந்திருக்கிறான்
அதனால்
செல்லறித்த மரமாய் கிடக்கிறேன்



இப்போதுதான்
உன்
இளமையும் யவனமும்
குறையாத ரகசியம் தெரிகிறது
நீ
அழியாத ஓவியம் !
நான் அழியும் மனிதன் 




  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

  •  








    Contact Form

    Name

    Email *

    Message *