Store
  Store
  Store
  Store
  Store
  Store

இளைஞர்களின் நிலை ! பரபரப்பு ஆய்வு


     ந்த நண்பர் மத்திய அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்.  தனது துறை தவிர இலக்கியம் மற்றும் தத்துவியலில் நிறைய ஆர்வம் கொண்டவர்.  ஒரு முறை அவர் என்னை சந்தித்த போது பேச்சுவாக்கில் ஒரு கேள்வி கேட்டார்.  இப்போதைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான பண்பாட்டு செறிவுடன் வாழ்கிறார்களா?  குடும்பம் மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா?  என்று கேட்டார்.  அதற்கு நான் அது சம்பந்தமாக எனது பதில் இருக்கட்டும்.  முதலில் நீங்கள் இளைஞர்களை பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்.  என்று கேட்டேன்.

    அதற்கு அவர் என் அபிப்பிராயம் மட்டுமல்ல சற்று விவரம் தெரிந்தவர்களின் எண்ணங்கள் கூட இளைஞர்கள் கெட்டு போயி இருக்கின்றார்கள்.  பொறுப்பில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது தான் என்று கூறி வேறொரு விஷயத்தை சுட்டிக் காட்டினார்,  அலட்டிக்கொள்ளாமல் சிரமப்படாமல் பணம் சம்பாதிக்க வேண்டும்.  உல்லாசமாகா இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களிடம் அதிகமாக இருக்கிறதே தவிர அதற்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை என்றார்.


     எனது தந்தையார் அவரது இளம்பிராயத்தில் நடந்த பல சம்பவங்களை என்னோடு பகிர்ந்து இருக்கிறார்.  ஆங்கிலேய ஆட்சியிருந்த அந்த காலம் சாதாரண ஜனங்களை கூட கூட்டம் போடாதே,  கும்பல் சேராதே,  ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நடக்காதே என்று பல கெடுபிடிகள் உண்டாம்.  ஒருமுறை நான்குநேரி  ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து வந்தே மாதரம் கோஷம் போட்டார்களாம்,  காவல் துறையினர் வந்து தடியடி செய்து எல்லோரையும் துரத்திவிட்டனராம்,  அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் பலவகையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இன்னல் படுத்தப்பட்டார்களாம்.  அப்போது பெரியவர்கள் எல்லாம் இவர்களை பொறுப்பில்லாமல் எதற்காக போராட்டம் அது இது என்று வாழ்க்கையை கெடுத்து கொள்கிறீர்கள். தொழிலை பார்ப்பதை விட்டுவிட்டு ஊர் காரியத்தை பார்த்தால் வருங்காலத்தில் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமென திட்டுவார்களாம்.

    இதை எதற்காக இந்த இடத்தில் சொல்கிறேன் என்றால் எந்த காலத்திலும் சிறியவர்களின் செயல்களை பெரியவர்கள் அங்கிகரிப்பதில்லை,  இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நாம் காதலித்த காலத்தை நியாயப்படி பார்க்க தோன்றும்.  நமது பிள்ளைகள் அதே செயலில் ஈடுபட்டால் அதை பொறுத்துக் கொள்ள நம்மால் இயலாது.  அதற்கு காரணம் பெரியவர்களின் அனுபவமும்,  அறிவும் வேறு,  இளைஞர்களின் பார்வை என்பது வேறு.


     இதே போன்ற மனோபாவத்தில் தான் நண்பர் பேசுகிறார் என்று எனக்கு தோன்றியது.  அதனால் அவரிடம் ரத்தம் இளமையாக இருக்கும் போது நெருப்பை தொட்டு பார்க்க தான் தோன்றும் சூடுப்பட்ட அனுபவம் வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும்,  நம் வீட்டு பிள்ளைகளே திருமணம் முடிகின்ற வரை சற்று துடுக்காக தான் நடந்து கொள்வார்கள்.  கல்யாணம்,  குழந்தை,  குட்டிகள் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் நிதானம் வந்து சகஜமாகி விடும் என்றேன்,  அதற்கு அவர் நீஙன்கள் சொல்வது சரியானது போல் தோன்றலாம் ஆனால் இப்போதைய நிலைமை நாட்டை மிகப் பெரிய அபாயத்தில் கொண்டு விடப்போகிறது.  அப்போது உங்கள் கருத்து முற்றிலும் தவறானது என்பதை உணர்வீர்கள் என்று சொல்லி விடை பெற்றார்.  நானும் அந்த உரையாடலை காலப்போக்கில் மறந்தே விட்டேன்.


    சமீபகாலத்தில் இந்திய இளைஞர்களின் இயல்பை பற்றி ஆராய்ந்த இரண்டு ஆய்வறிக்கைகளை படிக்க நேரிட்டது.  அதில் ஒன்று 1947-க்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வாகும்.  மற்றொன்று 2000-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வாகும்.  இரண்டு ஆய்வறிக்கைகளையும் ஒப்பிட்டு படித்த போது அதிர்ச்சி அடையாமல் யாராலும் இருக்க முடியாது.  முதலில் சுகந்திரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.


     மேலை நாடுகளை சேர்ந்த படித்த இளைஞர்களிடம் பணபுழக்கமும், வாழ்க்கை வசதியும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.  ஒரு நபரின் மாதாந்திர செலவுக்கு மாதம் 1000 டாலர் தேவை என்றால் இளைஞர்கள் 1500 டாலரே சம்பாதிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்கள்.  நினைத்த நேரத்தில் விரும்பிய பொருளை வாங்கவும், உல்லாச பயணங்கள் செய்யவும் அவர்களால் முடிகிறது.  ஆனால் அதே நேரம்அவர்களிடம் எதிலும் அவநம்பிக்கை, பாதுகாப்பற்ற மனோபாவம் வாழ்க்கையில் பிடிப்பில்லாத தன்மை,  சூதாட்டங்கள்,  மற்றும் போதை பழக்க வழக்கங்களில் அதிக ஈடுபாடும், தோல்விகளை தாங்க முடியாத மனநிலையும், தற்கொலை செய்து கொள்வதில் ஆர்வமும் மேலோங்கி நிற்கிறது.

    ஆசியாவில் மிக குறிப்பாக இந்தியாவில்  இளைஞர்களிடம் பரவலாக வறுமையே தாண்டவம்மாடுகிறது.  கடின உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.  பலருக்கு வேலையே இல்லை.  சமூக கஷ்டமும்,  குடும்ப கஷ்டமும் இந்திய இளைஞர்களை பாதாளத்தில் அமுக்குகிறது.  ஆனால் இளைய தலைமுறையினடம் லட்சிய பிடிப்பு மிக அதிகமாக இருக்கிறது.  தன்னால் சாதிக்க முடியும் என்றாவது ஒருநாள் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை மேலோங்கி நிற்கிறது.  பிறந்தது சாவதற்கல்ல சாதித்துவிட்டு செல்வதற்கே என்ற எண்ணம் ஒவ்வொருவர் இடத்திலும் உறுதியாக உள்ளது.  என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வை நடத்தியது சராசரியான ஒரு பேராசியர் அல்ல,  பிரபல தத்துவ மேதை பெட்ரான்ட் ரஸல் ஆவார்.  ஐரோப்பாவில் தோன்றிய தத்துவ மேதைகளில் இம்மானுவேல் காண்டக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியம் வாய்ந்தவர் மேதை ரஸல்,  அவர் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளில் உள்ள உண்மையின் சூடு பல அரசாங்கங்களை கூட சுட்டுயிருக்கிறது.  அப்படிப்பட்ட ஒருவரே அக்கால இந்திய இளைஞர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்துயிருக்கிறார்  என்றால் அதைவிட பெருமை வேறு எதுவுமில்லை எனலாம்.




     உண்மையில் இந்திய இளைஞர்கள் அர்ப்பணிப்பும், அயராது உழைப்பும் இல்லையென்றால் இந்த தேசம் இல்லையென்றே சொல்லலாம்.  நமது நாட்டிற்கு உள்ளிருந்தும்,  வெளியிலிருந்தும் பல நேரங்களில் அபாயங்கள் வந்து இருக்கின்றன.  இந்தியாவை கதை இத்துடன் முடிந்தது என உலகம் எதிர்பார்க்கின்ற போது அந்த எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி முன்பு இருந்ததை விட பல மடங்கு பலத்துடன் நம் நாடு எழுந்து நிற்கும்.  அப்படி நம் தேசம் புத்துயிர் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் சர்வ நிச்சயமாக இளைஞர்களே.

    அரபு நாடுகளிலிருந்தும்,  ஆப்கானிஸ்தானத்திலிருந்தும் ஏராளமான வீரர்கள் நம் நாட்டை கொள்ளையிட போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள் ஒரு காலத்தில்  ஆட்சி அதிகாரம் பேரலையாகவும்,  சூறாவளியாகவும் நம்மை தாக்கி படாதபாடுபடுத்தியது. ஒளரங்கசீப் என்ற ஆதிக்க வெறிபிடித்த அரைகிறுக்க அரசன் இந்திய மக்களை கழுகாக கொத்தி கொதறி ரணபடுத்திய போது சிவாஜி என்ற பதினேழு வயது சிறுவன் இளைஞன் தான் போர் முனையை   புதிய சரித்திரத்திற்கு திருப்பு முனையாக்கினார். வாள் முனையில் வெற்றியை மட்டுமே ருசிபார்த்துக் கொண்டிருந்த முகலாய பாதுஷாவிற்கு தோல்வியின் முகதரிசனத்தை தெளிவாகப் பார் தோற்றவன் இடுகின்ற ஒலத்தை மனசாட்சி கூட்டிற்கு யாருக்கும் தெரியாமல் இடு மண்டியிட்டு குலுங்கி அழு என புதிய சாம்ராஜ்ஜியத்திற்கு வெற்றி திலகமிட்ட வீர சிவாஜி தனது இளமை பருவத்தில்தான் சரிந்த தேசத்தை தனது வீரதோள் கொடுத்து தூக்கி நிறுத்தினார்.


     சீக்கிய சமூகம் என்று ஒரு தனி சமூகத்தையே உருவாக்கி ஒவ்வொரு சீக்கியனின் உள்ளத்திலும் வீர விதையை ஆழமாக விதைத்து கால்சா என்ற தனிப்படையை உருவாக்கிய குரு கோவிந்த சிங் தனது முப்பத்திரண்டாவது வயதில் தான் தனது லட்சிய பயணத்தை உறுதியாக்கி நாற்பத்தி இரண்டாவது வயதில் பூரண வெற்றியை அடுத்த தலைமுறையினருக்கு கொடுத்து விட்டு அமரர் ஆனார்.

    நரேந்திரன் என்ற வங்காள இளைஞனே விவேகாநந்தராகி 1893-ம் ஆண்டு சிக்காகோ நகரில் இந்திய பண்பாட்டை உலகறிய செய்தார்.  உலகமெல்லாம் தன்னை திரும்பி பார்க்க செய்த சுவாமி விவேகானந்தருக்கு வயது முப்பது தான் ஆகியிருந்தது. அதன் பிறகு அவர் வெறும் ஒன்பது ஆண்டுகள் தான் மண்ணுலகில் வாழ்ந்தார். வெறும் முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட அவரிடம் இருந்த வெளிப்பட்ட ஞான வெளிச்சம் தான் இந்தியாவின் சுகந்திர பயிரை செழித்து வளர செய்தது.  அவர் இல்லையென்றால் இன்றுவரை நமது நாடு ஆங்கிலேயர்களின் காலடியில் மிதிபட்டு அடிமை கூடாரமாகவே இருந்திருக்கும்.


     தேசதந்தை மகாத்மா காந்தி விவேகானந்தடமிருந்து தான் ஆத்ம பலத்தை பெற்றார். கடவுள் இல்லையென்று கடைசிவரை நம்பிய பண்டிட் ஜவஹலால் நேரு விவேகானந்தடமிருந்து தான் கணக்கிட முடியாத தேச பக்தியை பெற்றார். அறிவு மேதையான சக்கரவர்த்தி ராஜகோபலச்சார்யும்,  செயல் வீரரான நேதாஜி சுபாஸ்சந்திர போசும் மகாகவியான பாரதியும், சுவாமி விவேகானந்தரிடம் இருந்தே ஆக்க சக்தியை பெற்றனர். மாபெரும் இந்திய புரட்சிக்கு காரணமாகவும், உந்து சக்தியாகவும் இருந்த சிவாஜி,  குரு கோவிந்த சிங்,  விவேகானந்தர் போன்றோர்கள் உலகத்தின் பார்வையில் சின்ன சிறுசுகள் தான்,  ஆனால் இந்த அக்னி குஞ்சுகள் தான் மண்டி கிடந்த அறியாமை இருள்காட்டை வெந்து தணித்த ஞான சூரியன்கள் என்று நினைக்கும் போது இளைஞர் சக்தியின் மகத்வத்தை வியாக்காமல் இருக்க முடியாது.


    ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து அன்று பெரிய தலைவர்கள் எல்லாம் திட்டம் வகுத்தனர். அந்த திட்டத்ததை செயல்படுத்தியதில் தொன்னூறு பங்கு இளைஞர்களே முன் நின்றானர்.  திருப்பூர் குமரன் மணியாட்சி வாஞ்சிநாதன், ஜெய் ஹிந்த் செண்பகராமன் போன்றோர்கள் அக்கால இளைஞர்களின் தியாக வரலாற்றை இன்றும் நமது கண் முன்னால் நிறுத்தி வருகிறார்கள்.

     வாழ்க்கையில் முன்னேறுபவனுக்கும் சரி, முன்னேற துடிப்பவனுக்கும் சரி ரோல் மாடல் அதாவது உதாரண புருஷர்கள் யாராவது இருந்தே தீருவார்கள். தேசத்திற்காக வாழ்வையே அர்பணித்த இளைஞர்களுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகனாந்தர்,  காந்தியடிகள், நேதாஜி பகத்சிங், போன்றோர்கள் லட்சிய தலைவர்களாக தெரிந்தார்கள் இன்றைய இளைஞர்களுக்கு லட்சிய தலைவர்களாக இருப்பவர்கள் யார் என்று சிந்தித்து பார்த்தால் வேதனையாக இருக்கிறது. என்று சிலர் அங்கலாயிக்கின்றார்கள். 

    தற்கால இளைஞர்களின் நிலைப்பற்றி வருத்தப்படுபவர்களின் கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.  முதுகு நிறைய புத்தகத்தை சுமந்து கொண்டு மூன்றாம் வகுப்பிற்கு செல்லும் குழந்தையை நிறுத்தி உனக்கு யாரை பிடிக்கும், யாரைபோல் நீ வளர்ந்து ஆகப்போகிறாய் என்று கேட்டால் எந்தவித யோசனையும் இல்லாமல் சட்டென்று அந்த குழந்தை எனகு ரஜினிகாந்தை பிடிக்கும், நான் அவரை போல் தான் ஆகப்போகிறேன் என்று பதில் சொல்கிறது.  குழந்தை தானே அது நல்லது கெட்டவைகளை பகுத்து பார்க்கம் பரும் இன்னும் அதற்கு வரவில்லையே வந்த பிறகு திருந்தி கொள்ளும் என்று வயதுவந்த பிள்ளைகளிடம் இதே கேள்வியை கேட்டால் ஒருவன் கமல்ஹாசன் என்கிறான் இன்னொருவன் ஷாருக்கான் என்கிறான். வேறொருத்தியோ ஐஸ்வர்யராய் என்கிறாள்.  இன்னும் டெண்டுல்கா, டோனி,  என்றுயெல்லாம் பிரபலங்களின் பெயர்களை அடுக்குகிறார்கள். இவர்களின் வாழ்ககையில் இருந்து இளைஞர்கள் அப்படி என்னதான் கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை..?, புகழின் உச்சியில் இருந்தால் மட்டும் போதும் அதுவே உதாரணங்களாக ஏற்றுக் கொள்ள சரியான தகுதி என்று நினைக்கிறார்களோ என்னவோ?


     இந்த கருத்தை நாம் சொன்னவுடன் இன்னொரு கருத்து நம் முன்னால் வைக்கப்படுகிறது  1947-க்கு முன்பிருந்த இளைஞர்களின் பெருவாரியான பேர்களுக்கு நோக்கமும் லட்சியம் இருந்ததுயென்றால் அப்போது நாடு அடிமைபட்டு கிடந்தது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடவேண்டிய நெருக்குதல் இருந்தது.  அதாவது தாங்கள் அடைய வேண்டிய குறிக்கோளை பௌதிகமாக கண்ணுக்கெதிரே பார்த்தார்கள்.  இன்றைய நிலை அப்படியில்லை.  நோக்கங்கள் எதுவும் கருப்பொருளாக முன்னிற்கவில்லை.  தேசிய சவால் இல்லையென்றவுடன் தனிப்பட்ட வாழ்க்கை சவாலோடு போராட வேண்டிய நிலை வரும் போது அதில் பொது நோக்கம் என்பது குறைவாக தான் இருக்கும்.  அதற்காக அவர்களை சுயநலவாதிகள் என்று ஒட்டு மொத்தமாக பட்டம் கட்டி விட முடியாது.  சுகந்திரத்திற்கு முன்னால் மட்டுமல்ல பின்னாலும் கூட இளைஞர் சக்தியை நாடு இன்னதென உணர்ந்து இருக்கிறது.

    முன்னாள் பாரத பிரதமர் திருமதி.  இந்திரகாந்தி அம்மையார் அவர்களால் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்ட  போது அரசாங்கத்தின் சர்வதிகார போக்கை கண்டித்து ஜெயப்ரகாஷ் நாராயணன்.  முராஜி தேசாய், அடல் பிஹாரி  வாஜ்பேய்,  எல்.கே.  அத்வானி,  இ.எம் . எஸ்.  நம்பூதிரிபாடு போன்ற தலைவர்கள் போராட்டகளத்தில் குதித்த போது நாடு முழுவதும் உள்ள லட்ச கணக்கான இளைஞர்கள் தங்களது சுயவாழ்க்கையை சந்தோஷத்தை மறந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.  அரசாங்ககத்தின் அடக்கு முறையால் சிறைபட்டோர் வதைபட்டோர் எண்ணிக்கையில் இளைஞர்களே அதிகம் என்கிறார்கள். 


     இந்த கருத்தை அவ்வளவு சுலபமாக புறம் தள்ளிவிடமுடியாது. எனக்கு பத்து,  பதினேழுவயதிருக்கும் போது திருவனந்தபுரத்திலும், திருநெல்வேலியிலும் ஆயிரகணக்கான இளைஞர்கள் போராடியதையும் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானதையும் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அந்த போராட்டங்களில் பங்கு பெற்ற இளைஞர்கள் யாரும் தனக்கு இதனால் லாபம் வரும்,  பெரும் பதவிகளை பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஈடுபடவில்லை.  மாறாக அவர்களிடம் நாட்டின் ஜனநாயத்தை காப்பது,  கருத்து சுகந்திரத்தை சீர் குலையாமல் தடுப்பது போன்ற உயரிய நோக்கங்களே இருந்ததை நான் அறிவேன்,  அவசரநிலை காலத்திற்கு சற்று முன்பு வரை கூட சினிமா கதாநாயர்களின் ரசிகர்களாக இருந்தவர்கள் தங்களது ரசனைகளையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டதை யாரும் மறக்கமுடியாது.

    இந்திரகாந்தியின் காலம்வரை கூட போக வேண்டாம்.  சமீபத்தில் கார்கில் யுத்தம் நடந்தபோது ஒட்டுமொத்த தேசமே ராணுவ வீரர்களின் பின்னால் அணிவகுத்து நின்றது என்று சொல்லலாம்.  ஆனால் லட்சிய புருஷர்கள் என்று தங்களை சொல்லி கொண்ட அரசியல் தலைவர்கள் தான் அமரர்களான வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல் செய்து கொண்டிருந்தார்கள்.



     இளைஞர்கள் துடிப்போடு இருக்கிறார்கள் என்ற வாதத்தையும் அதற்கு நாம் கண்டுபிடித்த ஆதாரங்களையும் மீறி இரண்டாவது ஆய்வறிக்கை மறுக்கவே முடியாத வேறொரு பக்க வாதத்தை நமது முன்னால் வைக்கிறது.  இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னால் உள்ள இளைஞர்களின் தரத்தை பற்றி உண்மைகளை தெரிவிக்கும் நிறுவனம் நமது நாட்டை சேர்ந்த பத்தாம் பசலிகளால் உருவாக்கப்பட்டது என்று யாரும் நினைக்கவேண்டாம்.  அதிபுத்திசாலிகள் அதிமேதாவிகள் என்று நம்மால் நம்பப்படுகின்ற அமெரிக்கர்களின்  நிறுவனம் தான்அதை நடத்தியது.

    இனி அவர்கள் சொல்லும்  உண்மை என்னவென்று பார்ப்போம். தற்போதைய இந்தியாவில் இளைஞர்கள் இருவகையாக இருக்கிறார்கள்.  பழைய காலத்தில் இளைஞர்களை படித்தவர்கள் படிக்காதவர்கள் என இரண்டுவகையாக பிரிப்பது போல் இப்போது வசதி இல்லாதவர்கள் என இருகூறாக பகுக்கலாம் வசதி படைத்த இளைஞர்கள் இந்தியாவின் பாராம்பரியத்தை நம்புவதில்லை. மாறாக பாராம்பரியம் என்பது எல்லாம் மூடநம்பிக்கை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என கருதுகிறார்கள். தங்களது எண்ணங்கள், கோட்பாடுகள், நடை உடை பாவனைகள் எல்லாமே ஐரோப்பிய மயமாக இருப்பது தான் நாகரீகம் என்று கருதுகிறார்கள்.


     ஆண், பெண் சமத்துவம் என்பது ஆடை அணிவதிலும்,  பேதம் இல்லமல் உடல்கள் இணைவதிலும் உள்ளது என நம்புகிறார்கள். ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வது, திருமணம் செய்து கொள்ளாமல் படுக்கையை பகிர்ந்து கொள்வது,  மனைவி மற்றும் கணவன் மார்களை மாற்றி கொள்வது போன்ற நிகழ்வுக்ள எல்லாம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.  மது அருந்தாத, போதை பழக்கத்திற்கு ஆட்படாத இளைஞர்களின் எண்ணிக்கை மிக குறைவு,  நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கொண்டாட்டங்களில் கடந்த பத்து வருடமாக ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான பண ஆசையால் விபச்சாரி மற்றும் விபச்சாரன்களாகவும் இளைஞர்கள் மாறி வருகிறார்கள்.

     குடிப்பது,  கூத்தடிப்பது மட்டுமே இளைஞர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. கையில் கிடைக்கின்ற பணம் அனைத்தையும் கேளிக்கைகளுக்காகவே செலவு செய்யும் மனோபாவம்  அதிகரித்து வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் என்று அழைக்கப்படுகின்ற தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் போன்றவற்றில் இத்தகைய இளைஞர்களை வெற்றியாளர்களாகவும், நாகரீக மன்னர்களாகவும் மாறி மாறி காட்டப்படுகின்றார்கள்  இதனால் வசதியில்லாத இளைஞர்கள் இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு தங்களது ஒழுக்கத்தையும் அமைதியான வாழ்க்கையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு பரிதவித்து நிற்கிறார்கள்.  இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களை அந்த ஆய்வறிக்கை தருகிறது என்றாலும் இவைகள் தான் அதில் மிக முக்கியமானது. எத்தகைய வேதனை பாருங்கள்,  விவோகானந்தரும், காந்தியும் பிறந்த நாட்டில் ஒரின சேர்க்கை வாதிகளும், குடி வெறியர்களும் மலிந்து கிடப்பது தாங்க முடியாத துயரம்.



     இந்த ஆய்வறிக்கையை படிக்கும் போது நமது நெஞ்சு பற்றி எரிகிறது என்றாலும் அதற்குள்ளும்ஒரு ஆறுதலான விஷயம் மறைந்து இருக்கிறது.  இந்தியாவில் வசதி படைத்த இளைஞர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு இருபது போர்தான் என்றும் அந்த இருபது பேரே ஒழுங்கீனத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்றும் மீதமுள்ள என்பது பேர்கள் இன்னும் கெட ஆரம்பிக்கவில்லை என்றும் மறைந்திருக்கும் அந்த விஷயம் நமக்கு சுட்டிகாட்டுகிறது. விளம்பர வெளிச்சத்திலும், வசதியின் பளபளப்பிலும் பரிசுத்த சிகாமணிகள் பகட்டாக தெரியும் போது விளக்கை தேடி போய் செத்து விழும் வீட்டில் பூச்சிகள் போல் எண்பது சதவிகித இளைஞர்களும் விரைவில் கெட்டு விடுவார்களோ என்ற பயம் நம்மை போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.

    இந்திய பண்பாட்டில் ஒன்று மேயில்லை.  இந்திய கருத்துக்கள் எல்லாம் மடத்தனமானது என்ற எண்ணம் இந்திய மக்கள் மனதில் பரவலாக பரவ தொடங்கிய காலத்தில் சுவாமி விவேகானந்தர் தோன்றி நமது பெருமையை உலகுக்கு மட்டுமல்ல நமக்கும் எடுத்துகாட்டினார் இன்று அப்படியொரு விவேகானந்தர் தோன்றி வந்து காப்பாற்றட்டுமே என்று நீங்களும்,  நானும் சும்மா இருந்தால் நம்மை போன்ற மடையர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம் ஒவ்வொருவருக்குள்ளும் விவேகானந்தரின் சக்தி மறைந்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால் தான் நாட்டை எதிர்நோக்கி இருக்கும் அபாயத்தை அறிவு பிராங்கியால் தாக்கி அழிக்க முடியும்,  தொடர்ச்சியான பீரங்கி குண்டுகள் கற்கோட்டையை கூட மண் மேடாக்கி விடும்.













Contact Form

Name

Email *

Message *