Store
  Store
  Store
  Store
  Store
  Store

ரத்த சேற்றில் ஈழத் தாமரை


                   ஒரு இலங்கை தமிழரின் கேள்விக்கு குருஜியின் பதில்கள்

  ல்வேறுபட்ட அரசியல் சிந்தனைகளை கொண்ட நீங்கள் இலங்கத் தமிழர்களின் நிலைபற்றி எதுவுமே சொன்னதில்லையே ஏன்?

  அப்படிச் சொல்ல முடியாது எனது பல படைப்புக்களில் அவர்களைப்பற்றி பேசியுள்ளேன் மேலும் இலங்கை இனப்பிரச்சனையை நான் தமிழர் சிங்களவர் போராட்டமாக மட்டும் காணவில்லை காலனி ஆதிக்கத்தின் தொடர் விளைவாகவும் பார்க்கிறேன் ஆதிகாலத்தில் இலங்கையை தனித்தனி ஆட்சிப் பிரதேஷங்களாகவே வெள்ளையர்கள் வைத்திருந்தால் இன்றைய சிக்கல்கள் வந்திருக்காது தங்களது சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் இரண்டாம் தரத்தவர்களாக இருக்கும் சூழலும் ஏற்பட்டிருக்காது


    பிரிட்டிஷ் ஆதரவை காலனி நாடுகள் நத்தியிருக்க வேண்டும் என்பதற்க்காகவே இந்தியாவில் காஷ்மீரையும் இலங்கையில் யாழ்பாணத்தையும் பிரச்சனை பகுதிகளாக விட்டுச் சென்றனர் காஷ்மீரும் யாழ்குடாவும் ஒரே மாதிரியான சிக்கலில் உள்ளது இல்லையென்றாலும் சிக்கலின் கர்த்தா ஒருவரே

   அப்படியானால் காஷ்மீரும் யாழ் பகுதியும் தனிநாடுகளாக வேண்டும் என்பது உங்கள் கருத்தா?

   இது முட்டாள் தனமான கேள்வி இதன் அடிப்படையில்தான் சில காங்கிரஸ்காரர்கள் இலங்கை இரண்டு நாடுகளாக ஆகவேண்டும் என இந்தியா சொன்னால் காஷ்மீரை தனி நாடாக்கினால் என்ன தவறு என்று வாதம் கிளம்பும் அதனால் தனி ஈழம் கூடவே கூடாது என்கிறார்கள்

   என்னைக் கேட்டால் இரண்டு விவகாரங்களுக்கும் பிரிட்டிஷ்காரர்கள் தான் காரணம் என்பதில் மட்டும்தான் ஒற்றுமை இருக்கிறதே தவிற மற்றபடி எதிலும் இல்லை இலங்கைத் தமிழர்களைப் போல காஷ்மீர் இந்தியர்கள் மொழியால் அடிமையாகவில்லை வேலைவாய்ப்பில் புறந்தள்ளப்படவில்லை பெருளாதாரத்தால் அமுக்கப்படவில்லை மற்றப் பகுதி இந்திய மக்கள் போலவே சகல விஷயங்களிலுல் சர்வ சுதந்திரமாய் வாழ்கிறார்கள்


    இலங்கைத் தமிழர்கள் அப்படியல்ல அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமே சிங்கள இனவாதிகளால் கருவறுக்கப் படுகிறார்கள் அவர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு இன்றைய நிலையில் தனி ஈழத்தை விட்டால் வேறு மார்க்கம் இல்லை

   தமிழர் போராட்டம் தான் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டதே! இனி ஈழம் எப்படி சாத்தியம்?

    உலக வரலாற்றில் எந்த சுதந்திரப் போராட்டமும் ஆதிக்க சக்திகளால் முறியடிக்கப் பட்டதில்லை சற்று மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது அவ்வளவே இன்று இலங்கயில் நிகழ்வது போருக்கு பிந்தய அமைதியல்ல இன்னொறு போருக்கான எத்தனிப்பு அமைதி என்று சிங்களவர்க்கும் தெரியும்



    களத்தில் பிரபாகரன் இல்லையே பின்னர் யுத்தத்தை முன்னெடுத்து செல்வது யார்?

    விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளில் எனக்கு பல அதிருப்திகள் உண்டு ஆனால் தந்தை செல்வாக்குப் பிறகு இலங்கத் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி பிரபாகரன் தான் என்பதில் உலகுக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது அதே நேரம் அவர் இல்லை என்றால் போராட்டம் முடிந்து விடும் என்பது வெறுங்கனவு

    எந்தத் தனிமனிதனையும் நம்பி ஒரு தேசத்தின் விடுதலைப்போர் நடந்தது இல்லை நடக்கவும் முடியாது மேலும் அவர் இருக்கிறாரா? இல்லையா என்ற லாவணிப் பாட்டுக்கு நான் வரவில்லை ஒரு விடுதலை வீரனின் இருப்பை விட இறப்பே சக்திவாய்ந்ததென்று சரித்திரம் பலமுறை நிறுபித்திருக்கிறது என்னைப் பொறுத்தவரை ஈழத்தமிழன் ஒவ்வொறுவனுமே பிரபாகரன் தான்

   நீங்கள் புலிகளிடத்தில் எந்த இடத்தில் அதிருப்தி அடைகிறீர்கள்?

     எனக்கு ஆயுதப் போராட்டத்தில் உடன்பாடு கிடையாது அதே நேரம் சந்தர்ப்பம் ஆயுதத்தை நாடவைத்தால் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற நடைமுறையை உணர்ந்தவன் அஹிம்சைப்படி வாழ்ந்த மகாத்மா காந்திக் கூட பாக்கிஸ்த்தான் வலுச்சண்டைக்கு பாரதத்தை இழுத்த போது போர் விமானங்களுக்கு ஆசிக்கூறி அலுப்பினார் எனவே அதை ஏற்றுக் கொள்ளலாம் 


   ஆனால் பங்காளிச் சண்டையில் தேவையில்லாமல் ஸ்ரீசபாரத்தினம் பத்மனாபா அமிர்தலிங்கம் போன்றோர்களை கொன்றதை ஏற்கமுடியாது மாற்றுக் கருத்து உடையவர்களை கொலை செய்வதுதான் சரியானது என்றால் ஸ்ரீலங்கா அரசுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

    அடுத்தது நம்நாட்டுத் தலைவரான ராஜிவ் காந்தி அவர்களை படுகொலை செய்ததை மன்னிக்கவே முடியாது பிரபாகரனிடம் இருந்த சர்வதிகார மனப்பான்மை அரசியலில் தெளிவில்லாத செயல்பாடுகள் எல்லாம் எனக்கு பிடிப்பதில்லை


   இப்போது முடிந்த யுத்தத்தில் இந்தியா நடந்துக் கொண்ட முறை சரிதானா?

     நிச்சயம் இல்லை இந்தியாவின் நிலைப்பாட்டை தற்கொலையோடுதான் ஒப்பிட வேண்டும் சோனியா காந்தி புலிகளை தனது கணவனை கொன்றவர்கள் என்றுதான் பார்க்கிறாரே தவிற அல்லல் படுத்தும் இனப்பிரச்சனையாக பார்க்க கற்றுக் கொள்ள வில்லை

    அவரின் அரசியல் மூடத்தனம் பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டு விட்டது மட்டுமல்ல இந்தியாவின் தென்பிராந்திய பாதுகப்பிற்கும் குந்தகமாக ஆகிவிட்டது இந்திராகாந்தி அம்மையாரும் ராஜிவ்காந்தியும் இலங்கையில் மாற்றுசக்திகளை கால் ஊன்ற விடக்கூடாது என்றுதான் கடேசி வரை போரடினார்கள் ஆனால் சோனியாவின் செயல் ஸ்ரீலங்காவில் சீனாவை கொண்டுவந்து விட்டது இதன் பாதிப்பு வருங்காலத்தில் தமிழ் நாட்டில் எதிரொலிக்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக இருக்கும்


     இனி இந்தியா என்ன செய்தால் நன்றாக இருக்கும்?

    சிங்கள அரசை தமிழ் மக்களுக்குறிய உறிமைகளை கொடுக்கும்படி செய்யவேண்டும் மறுத்தால் சர்வதேச நெறுக்கடியை கொடுக்க பாடுபட வேண்டும் இதையெல்லாம் விட முக்கியம் உலக அரங்கில் புலிகள் தங்கள் முகத்தை பயங்கரவாதிகளாக பதிந்திருப்பதை மாற்ற கடுமையாக பாடுபட வேண்டும்

   இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் ஹீரோக்கள் அல்ல தனித்தமிழ் நாடு கேட்கும் வில்லன்களின் கூட்டாளி என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவி இருப்பதை மாற்ற உண்மையாக முயல வேண்டும் தமிழ் நாட்டில் யாரும் தனிநாடு கேட்பவர்களை மதிப்பதில்லை என்ற உண்மை புலிகளுக்குத் தெரியாமல் போனது பெரிய சரித்திரப் பிழை

 இலங்கைத் தமிழர்க்காக உண்மையாக உதவிய இந்தியத் தலைவர்கள் யார் யார்? இனியும் உதவக் கூடியவர்கள் யார்?

    திருமதி இந்திராக்காந்தி  தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர் இருவரையும் தவிற உருப்படியாக யாரையும் சொல்ல முடியாது இப்போதைக்கு கண் எதிரே தெரிவது வை. கோபால்சாமிதான் ஆனால் பா. ஜ. க மூத்த தலைவர் அத்வானிக் கூட நம்பிக்கை உண்டாக்க கூடிய கருத்துடன் காணப்படுகிறார் தமிழ் நாட்டில் தற்போது இலங்கைப் பிரச்சனைப் பற்றி மிகத்தெளிவான அனுகுமுறை உடையவராக இந்துமக்கள் கட்சித் தலைவரும் எனது நெறுங்கிய நண்பருமான அர்ஜூன் சம்பத் உள்ளார் இதுமட்டுமல்ல இப்பாது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இலங்கைப் பிரச்சனையை ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்துடன் அனுகுகின்றன என்றும் சொல்லலாம்



Contact Form

Name

Email *

Message *