Store
  Store
  Store
  Store
  Store
  Store

ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்


    தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது 3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது
வீரகேசரி செய்தி


  ம்ம ஊரு அரசாங்கப்பள்ளியில் ஒரு காட்சி வகுப்பரையில் நான்கு ஆசிரியைகள் பேசுகிறார்கள் 

   நேற்று ராத்திரி முழுக்க தூக்கமே இல்லை இது ஒரு டீச்சரின் பேச்சு 

  அதற்கு தூங்காம முழிச்சிருந்து பசங்களுக்கு இன்னைக்கு எடுக்கப்போற பாடத்துக்கு குறிப்பெடுத்தீங்களாக்கும்? என்று இன்னொறு டீச்சரின் கேள்வி

  அதற்கு முதல் டீச்சரின் பதில் ஆமா அதுதான் பொழைப்பாக்கம் நீங்க ஒண்ணு அக்கா கடுப்பை கிழப்பாதிங்க எங்க கொழுந்தியாள் மெட்ராசில் இருந்து வர்ராளாம் எங்க வூட்டுக்காரறு இருக்கிறதை எதையாச்சும் தூக்கி கொடுக்காம இருக்கனுமேன்னுதான் ஒரே கவலை பதிலை கேட்டு மற்ற டீச்சருங்க சிரிப்பு

  வேரொறு வகுப்பரை ஆசிரியர்கள் கூட்டம் ஒருவர் இந்தப் பாழாய் போன பன்னீர் செல்வத்துக்கு பணம் கொடுத்தது தப்பா போச்சு ஒரு மாதம் கூட வட்டியை சரியா கட்ட மாட்டேங்கிறான் என்று சலிப்பாய் பேசுகிறார்

  அதற்கு மற்றவர் அதுதான் ஆள் பார்த்து கொடுக்கனும் நானும் இப்படி பட்ட ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழியாய் முழிக்கிறேன் வட்டியும் வரலை அசலும் வராது போலிருக்கு என பதில் அறிவுறையை சொல்கிறார்

   பள்ளிக்குழந்தைகளோ மைதானத்தில் மதிய வெயிலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

  இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு தெண்டச் சம்பளம் கொடுத்து வரிப்பணத்தை வீணடிப்பதை விட ரோபோக்களையே பாடம் எடுக்க விடலாம் பிள்ளைகளாவது புத்திசாலித்தனமா படிக்கும் 



Contact Form

Name

Email *

Message *