Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தி முதல் சோனியா வரை

தலைவர்களும் தவறுகளும்


நாணயத்திற்கு இரண்டுப் பக்கங்கள் உண்டு

 மனிதர்களுக்கும் அப்படித்தான் இருபக்கங்கள் உண்டு என தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்

 நம்ம தலைவர்களும் மனிதர்கள் தானே! அவர்களின் இரு பக்கங்களையும் சற்று புரட்டிப் பார்ப்போம்


 மஹாத்மா காந்தி  வதார புருஷர்கள் என்று சொல்லப்படுகின்ற ராமனையும் கிருஷ்ணனையும் நாம் நேரில் பார்த்ததில்லை அவர்கள் வாழ்ந்தக் காலமும் நமக்கு சரியாக தெரியாது

ஆனால் காந்தியை நமக்குத் தெரியும் அவரின் வாழ்வு நமக்குத் தெரியும்

அவதாரங்களுக்குறிய அத்தனை லக்ஷ்சணங்களும் காந்தியிடம் உண்டு காந்தியின் ஒழுக்கத்தை சந்தேகிப்பவன் அவரின் நேர்மையில் குற்றம் காண்பவன் நிச்சயம் நல்ல மனிதனாக இருக்க முடியாது

சத்தியத்தைக் கடைபிடிப்பதில் ராமன்

 கருணையில் இயேசு

 எளிமையில் முஹமத்நபி

 இத்தனையும் சேர்ந்த வடிவம்தான் காந்தி

 இவ்வளவு சிறப்பு வாய்ந்த காந்திக்கும் நிலாவில் களங்கம் உள்ளதுபோல ஒரே ஒரு குறை சுட்டிக்காட்டப் படுகிறது

இந்தியாவின் பிரதம மந்திரியை தேர்வு செய்யும் பொழுது சர்தார் வல்லபாய் படேலுக்குப் பதிலாக நேருஜியை தேர்ந்தெடுத்து விட்டார் என்பதே அக்குறை!

சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்களிப்பை திறம்பட எடுத்துச் செல்வார் நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பை நீண்டகால நோக்கில் உருவாக்குவார் என நேரு மீது காந்தி வைத்த நம்பிக்கை தவறு என்கிறார்கள்

 இன்றைய இந்தியாவின் நடைமுறையை காணும்பொழுது அது சரியாகத்தான் படுகிறது


 ஜவஹர்லால் நேரு   ல்ல படிப்பாளி சிறந்த அறிஞர் நாவண்மை மிகுந்த சொற்பொழிவாளர்

கோடிஸ்வரனாக இருந்தாலும் நாட்டுக்காக கொடுஞ்சிறையையும் இன்பமுடன் ஏற்றுக் கொண்ட தியாகி

பொதுப்பணத்தை கையாள்வதில் நெருப்புப் போல வாழ்ந்தவர்

ஒரு உயர்ந்த நாட்டின் சிறந்த தலைவராக பவனிவர வேண்டுமென்ற லக்ஷ்சியக் கனவு இவரிடம் இருந்தது

ஆனால் இந்தியப் பண்பாண்டின் நிஜத்தன்மையின் மீது இவருக்கு நம்பிக்கை கிடையாது

 பல நேரங்களில் ஐரோப்பாவை மனதில் கொண்டே பல திட்டங்களை வகுத்து தேசத்தை சிக்கலுக்குள்ளாக்கினார்

 துதிபாடிகளின் கூட்டத்தாரை நம்பி பல முடிவுகளை எடுத்து இன்றைய சிக்கல்களை நமக்கு விட்டு சென்றுள்ளார்


 காமராஜர்   சுயநலமே இல்லாத நல்ல நிர்வாகி படிக்காத மேதை

தமிழகத்தின் இன்றைய கல்வி வளர்ச்சிக்கு முதலும் முடிவுமான காரணகர்த்தா

 குறுகியகால சிந்தனையும் குறுக்குப் புத்தியும் இல்லாத அரசியல்வாதி

 புழுக்கள் நிறைந்த அரசியல் சாக்கடையில் தாமரைப்பூவாக வாழ்ந்தவர்

இனியொருத் தலைவர் இப்படி வரமாட்டாரா என்று எல்லாத்தரப்பு மக்களையும் இன்றளவும் ஏங்க வைப்பவர்

ஆனாலும் இந்திய தேசத்தை ஆளும் தகுதி தனக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இவரிடம் இருந்தது

  நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே தரத்தில் வைத்து பார்த்தவர் என்றாலும் தனது ஜாதிக்காரர்களுக்கு சிறிது தனிச்சலுகை காட்டினார் என்ற குற்றசாட்டை இவரிடமிருந்து இன்னும் பிரிக்க முடியவில்லை


இந்திராக்காந்தி  வீரம் செரிந்த பெண்மணி ஆசியப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை விண்ணோக்கி உயர்த்தியவர்

சர்வதேசக் கொள்கைகளை சரியான கோணத்தில் உருவாக்கியவர்

உலக அரங்கின் முக்கிய விஷயங்களுக்கு உடனுக்குடன் முடிவெடுத்து துரிதகதியில் செயலாற்றியவர்

 இருப்பினும் தான் மட்டுமே தொடர்ந்து பதவியில் அமரவேண்டும் என்பதற்காக ஜனநாயகப் பாதையை திசைமாற்ற துணிந்தவர்

கவர்ச்சிகரமாக திட்டங்கள் பல வகுத்தாலும் அவைகளின் செயல்பாட்டைப் பற்றிக் கவலைபடாதவர்

 தேர்தல் வெற்றிக்காக முரண்பாடு கொண்டவர்களிடத்தில் கூட கூட்டணி வைக்கலாம் என்பதற்கு இவரே முன்னுதாரணம்

பல உள்நாட்டுக் குழப்பங்களின் பிள்ளையார் சுழியே இவர்தான் 


 சி.என்.அண்ணாத்துரை  மிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்ற மேடைப் பேச்சாளர்

தனது சொல்லாடலாலே மக்கள் கூட்டத்தை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கும் சூத்திரம் தெரிந்தவர்

நாடகம் மற்றும் சினிமாக்கலையை அரசியல் மாற்றத்திற்கு பயன் படுத்தலாம் என்ற விஷயத்தை இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக்கொடுத்த ஆச்சாரியர்

இத்தனை திறமை இருந்தாலும் தன் பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாதவர்

 எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்

தனது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையால் தன் கட்சியின் மற்றத் தலைவர்களின் தவறுகளை கண்டிக்க முடியாமல் திண்டாடியவர்

என்ற விமர்சனங்களை மறைவுக்குப் பிறகும் சுமப்பவர்


 எல். கே. அத்வானி  இன்று நம் நாட்டிலிருக்கும் துணிச்சல் மிகுந்த தலைவர்களில் முதல்மையானவர்

கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் உள்ள அத்தனை சந்து பொந்துகளின் நடைமுறை பிரச்சனைகளின் விபரங்களை விரல் நுணியில் வைத்திருப்பவர்

 நீண்டகால நலனை மனதில் வைத்து முடிவெடுப்பவர்

மிகத்தீவிர தேசப்பற்றாளர் என்று சொல்லப்பட்டாலும்

இந்துக்கள் நலனில் மட்டுமே அக்கரையுள்ளவர்

தான் ஒரு தேசத்தலைவர் என்பதை மனதில் வைக்காமல் இன்னும் தன்னை ஆர். எஸ். எஸ் தொண்டராகவே நினைத்துக் கொண்டிருப்பர்

விமர்சனத்துக்குறிய கருத்துக்களை வெளியிடுவதில் வல்லவர் என்றும் குறை சொல்லப் படுகிறார்


 மு.கருணாநிதி   நல்ல தமிழரிஞர் கைதேர்ந்த எழுத்தாளர்

அரசியல் நெழிவு சுழிவுகளை நன்கறிந்தவர்

எத்தகைய சிக்கலையும் சமாளிக்கும் சமர்த்தர்

அரசியல் கோட்பாடுகளை எப்படி வேண்டுமானாலும் சமயத்திற்கு ஏற்றவாறு வழைப்பதில் வல்லவர்

 அடிமட்டத்திலிருந்து கடின உழைப்பால் அரியணையை பிடித்த சாணக்கியர்

தோல்வியையும் அவமானத்தையும் உடனுக்குடன் மறந்து புயல்போல் செயலாற்றுவதில் சூரர்

 இத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் எதிலிலும் சுயநலத்தையே முன்னிருத்துபவர்

 தன்னையும் தன் சுற்றத்தாரையும் மட்டுமே முன்னேற்றுவதில் குறியாய் உள்ளவர்

காரியம் ஆகவேண்டுமானால் காலிலும் விழுவார் கழுத்தையும் நெறிப்பார்

 ஊழல் புரிபவர்களுக்கு இவர்தான் முன்னோடி

 என்றும் இன்னும் ஏராளமாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு


 ஜெ. ஜெயலலிதா நல்ல நிர்வாகி திறமையான தலைவர்

 சோதனைகளும் தோல்விகளும் போட்டிப்போட்டு வந்தாலும் துவண்டுப் போகாகத நெஞ்சுறுதி வாய்ந்தவர்

தேசப் பிரிவினை சக்திகளிடம் இறக்கம் காட்டாதவர்

 முடிவெடுப்பதில் துணிச்சல் வாய்ந்தவர்

என்பது இவரின் நல்லப் பக்கங்கள்

தான் என்ற ஆணவம் மிகுந்தவர்

முகஸ்துதிக்கு அடிமையாகி துதிபாடிகளின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டவர்

 சொல்பேச்சுக் கேட்டு நடப்பாரே தவிற நல்லது கெட்டதுகளை அலசி ஆராய மாட்டார்

 யாரையும் முழுமையாக நம்ப மாட்டார்

 நிலையில்லாத தன் மனதைப் போலவே கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மாற்றிக் கொண்டேயிருப்பார்

 பலநேரங்களில் வீண் பிடிவாதத்தால் நல்லவர்களை பகைத்துக் கொள்வார்

 என்று நிறைய கெட்டப்பக்கங்களும் இவரைப்பற்றி நீழுகிறது


 மன்மோஹன்சிங்  சிறந்த பொருளாதார மேதை

உலகத்தின் நவீன கால நடைமுறையை நன்கறிந்தவர்

பழகுவதில் இனிமையானவர் நண்பர்களை மறக்காதவர்

படிப்பறிவும் பட்டறிவும் நிறம்பியவர்

 இப்படிப்பல சாதக அம்சங்களை கொண்டவராக இருந்தாலும்

 பதவி சுகத்தில் தகுதியை மறந்தவர்

இந்தியாவை விட அமெரிக்காவை நேசிப்பவர்

 இந்திய மக்களுக்கு காட்டும் விசுவாசத்தை விட சோனியா குடும்பத்திற்கு காட்டும் விசுவாசமே சிறந்தது என்று கருதுபவர்

எனப்பல பாதக அம்சங்களும் இவருக்கு உண்டு


 வை. கோபால்சாமி உண்மையான தமிழ் விசுவாசி தமிழர்களை அரசியலுக்காக அல்ல அரவணைப்பதற்காகவே நேசிப்பவர்

இன்றைய தமிழ் அரசியல்வாதிகளில் அறிவும் தெளிவும் கலைஞருக்கு அடுத்ததாக உடையவர்

சிறந்த பார்லிமண்டேரியன்

ஊழல் செய்வதில் நம்பிக்கை இல்லாதவர் என்று புகழப்படுகிறார்

உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இவரின் பூர்வீக சொத்து

 இதனாலேயே கட்சியை வளர்க்க முடியாமல் மட்டுமல்ல காப்பாற்ற முடியாமலும் இருக்கிறார்

ஈழப் பிரச்சனையில் காட்டும் அக்கரையில் பாதியளவாவது உள்நாட்டுப் பிரச்சனையில் காட்ட மனமில்லாதவர் கற்பணைவாதி

என்றும் இகழப்படுகிறார்


 சோனியாகாந்தி இதுவரை சொல்லிவந்த தலைவர்களின் நல்ல அம்சங்களையும் கெட்ட அம்சங்களையும் பிரித்து பார்க்க நம்மால் முடிந்தது

 சோனியாஜி விஷயத்தில் அப்படியொரு அம்சமே தென்படவில்லை

 அத்திப்பழத்தில் அத்தனையும் சொத்தை என்பதுபோல இவரின் விஷயங்கள் அனைத்திலும் கல்லும் முள்ளுமே தெரிகிறது

 ஒரு வேளை ஊரும் உலகமும் அறியாத வண்ணம் எதாவது நல்ல இயல்பு இவரிடம் மறைந்துக் கிடக்கலாம்

அது நமக்குத் தெரியவில்லை

வரும் காலத்தில் அப்படி எதாகினும் கண்ணில் பட்டால் அதை எழுதுவதில் நமக்கு சிக்கலில்லை

அதுவரை காத்திருப்போம்...



Contact Form

Name

Email *

Message *