Store
  Store
  Store
  Store
  Store
  Store

வழி கேட்க்காதே நடந்து போ


சென்னையில் இருந்து மும்பை செல்ல வழி இருக்கிறது

 நாட்டு பிரதம மந்திரியை நேரில் காண வழி இருக்கிறது

அதே போல கடவுளை காண வழி இருக்கிறதா?

கடவுளை அடைவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன? என நிறையை பேர் யோசிப்பது உண்டு

இன்று உலக மக்கள் தொகையில் எத்தனை பேர் உள்ளார்களோ நாளைக்கு எத்தனை பேர் வருவார்களோ அத்தனை வழிகள் கடவுளை அடைவதற்கு உண்டு.


   நான் கடவுளை அடைய வேண்டும் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தாலே போதுமானது.  தானாக வழி தெரியும்.

  ஏனென்றால் கடவுளுக்கு எல்லா திசையும் ஒன்று தான்.

  அவர் குறிப்பிட்ட திசையை மட்டும் நோக்கிக் கொண்டிருந்தால் அந்த திசையை மட்டும் தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

 கடவுளிடம் அந்த பிரச்சனையில்லை.  ஆனாலும் கூட நமது புராணங்கள் கடவுளை அடைந்தவர்கள் பயணித்த வழியில் சில பாதையை காட்டுகிறது.


   சக்கரவர்த்தி பரிஷித் சுகதேவரிடம் கேள்வி கேட்டதன் மூலமே கடவுளை அடைந்தான்

.  சுகதேவரோ கடவுளை பற்றி சொன்னதாலேயே அவரை அடைந்தார்.

  நாரத மகரிஷி மனதால் நினைத்ததன் மூலம் நாராயணனை அடைந்தார்.

 திருமகளான மகாலஷ்மி பாத சேவை செய்தே திருமாலை அடைந்தார்.

  யது மகாராஜா வழிபாட்டு மூலமாக  இறைவனை அடைந்தார்.

  ரத சாரதியான அக்ருவர் பிராத்தனை மூலமே கடவுளை அடைந்தார்.


   மகாவீரனான அனுமான் பணிவு மூலமாகவும்,

  அர்ஜுனன் நட்பு மூலமாகவும்,

  பலி சக்கரவத்தி சமர்ப்பனம் மூலமாகவும்

 விஸ்வாமித்திர மகரிஷி விடா முயற்சினாலும் கடவுளை அடைந்தார்கள்.

 நமது காலத்தில் பக்தியின் மூலமாக ராமகிருஷ்ண பரமஹம்சரும்

 

 ஞானத்தின் மூலமாக சுவாமி விவேகானந்தர், ரமண மகஷியும்,

 ஜீவ காருண்யத்தின் மூலமாக வள்ளலாரும் கடவுளை அடைந்திருக்கிறார்கள்.

  அவரை அடைவதற்கு வழி எது என விசாரிப்பதை விட அடைந்தே தீருவேன் என முயற்சி செய்வதே சிறந்த மார்க்கமாகும்.




 

Contact Form

Name

Email *

Message *