Store
  Store
  Store
  Store
  Store
  Store

அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?


கேள்வி  அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா?
                                                                                      மகாலட்சுமி   கும்பகோணம்
 ஜோதிடத் துறையில் அமாவாசை தினத்தைப்   பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகிறது.  அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்கள்.  சுபநாள் என்று வாதிடுபவர்கள் அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காரியங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.

 அசுப நாள் என்று சொல்பவர்கள் அன்றைய தினம் சந்திரன் முழுமையாக பூமியால் மறைக்கப்பட்டு விடுகிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள ஆகர்ஷண தொடர்பு அமாவாசை நேரத்தில் இருப்பது இல்லை.  அதே நேரம் நேரத்தை தேய்பிறையின் முடிவு என்று சொல்லலாமே தவிர வளர்பிறையின் ஆரம்பம் என்று எந்த  நிலையிலும் கருத முடியாது.  அமாவாசைக்கு அடுத்த நாள் தான் வளர்பிறை துவங்குகிறது.  எனவே அமாவாசை அசுப தினமே என்று வாதிடுகிறார்கள்.

  இந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனத்தல் எடுத்தக் கொள்ளக் கூடிய ஒரு தகவல் இருக்கிறது.  அது அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து விடுகிறது.  சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான்.  சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல அனுபவ உண்மையுமாகும்.

  தாயின் அன்பைப் பெறாத அல்லது தாய் மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும் சிரமமாகும்.  இத்தகைய குழந்தைகளிடம் நல்லவை அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.

 பொருளைத் திருடி தண்டனை பெற்றவன் தான் திருடன் என்று கூறமுடியாது.  திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம் தான்.  அதனால் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளிடம் பொருளைக் கவரும் இயல்பு சற்று அதிகமாக இருப்பது உண்மைதான்.





 

Contact Form

Name

Email *

Message *