Store
  Store
  Store
  Store
  Store
  Store

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?

  றவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

 ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்

 அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

 உண்மையில் தரிசனம் என்பது என்ன?  கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும் 


அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான்.

 அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

  கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது

 ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.


  திருவண்ணாமலையை வெறும் மலையாக பார்ப்பது சாதாரண காட்சி தான்.  அதையே சிவபெருமானின் லிங்க வடிவமாக காணும் போது ஆனந்த காட்சியாக மாறிவிடுகிறது.

 ஓவியத்தில் ஒரு பெண் சிரிக்கிறாள்.  அது நமக்கு சாதாரணமான ஒரு படம் தான்.

 ஆனால் அந்த படத்தில் உள்ள பெண்ணின் தகப்பனோ, கணவனோ அதை காணும் போது வெறும் படமாகவா பார்ப்பான்?

 அதே போன்று பார்ப்பது தான்.  அதாவது உணர்வு கலந்து பார்ப்பது தான் தரிசனமாகும்.

 எல்லா பொருளும் ஞானிகளுக்கு கடவுளை ஞாபகப் படுத்தும்.

  சாதாரண மனிதர்களான நமக்கு ஒரு சில பொருள் தான் கடவுள் உணர்வை தட்டி எழுப்பும்.

 அப்படி இறை உணர்வை தூண்ட கூடியதாக கோபுரம், கொடி மரம் எல்லாம் இருக்கிறது

  எனவே அவைகளை பார்ப்பது தான் உண்மையான தரிசனம்.  மற்றவையெல்லாம் வெறும் பார்வைகளே ஆகும்.




 

Contact Form

Name

Email *

Message *