Store
  Store
  Store
  Store
  Store
  Store

பம்பரம் நீ! சாட்டை யார்...?


  டவுளின் எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள் தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள்

கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம்.  எழுதிகிறோம்.  பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.

  நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம் நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை அனுபவமாகவும் உணர்கிறோம். 



 பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.

  முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல் எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம் என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.

  காலையில் எழுகிறேன்.  கடுமையாக உழைக்கிறேன்.  இரவில் உறங்குகிறேன்.  இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

  என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு மூச்சி விட மாட்டோம்.


 அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.

  இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.

  நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.

  ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.

 அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.

  இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின் சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள் ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.  


அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.

  நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது.  அப்போது தான், அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.

  அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.

  நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.

  அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.

  இந்த உலகம் நாடக மேடை தான்.  நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.

  அவன் அழச் சொன்னால் அழுகிறோம்.  சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.

 நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா? 

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற  அகங்ஹாரத்தால் நடப்பவைகள். 

 அதில் கடவுள் சித்தம்.  உன்னை பரிசோதிப்பது மட்டுமே.


Contact Form

Name

Email *

Message *