Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாலை சுற்றினால் மாமனுக்கு ஆகாதா?

    சிலர் மாலை சுற்றிப் குழந்தை பிறந்தால் மாமனுக்குக் கண்டம் என்கிறார்களே, அது உண்மையா? ஜோதிட சாஸ்திரங்களில் அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்

குழந்தை மாலை சுற்றிப் பிறப்பது என்பது தொப்புள் கொடி குழந்தையின் உடலில் சுற்றிக் கொண்டு இருப்பது தான்.

 இது தாய் தவறுதலாகத் திரும்பிப் படுப்பதனாலோ அல்லது குழந்தை கருப்பைக்குள் எசகு பிசகாக நெளிவதனாலோ ஏற்படுகிற விஷயமே தவிர வேறு எந்தக் குறியீடும் அதாவது ஜாதகப்படி எதிர்காலப் பலன்களை உணர்த்தும் குறியீடோ அது அல்ல.

இருப்பினும் குழந்தையின் ஜனன நேரத்தில் அமைந்திருக்கும் சில கிரக நிலை தாய் மாமனுக்கும் நல்ல பலனையோ கெடுதியான பலனையோ கொடுக்க வாய்ப்புள்ளது


 உதாரணமாக சுபகிரஹங்களின் பார்வை இல்லாமல் லக்னத்திற்கு 5ம் இடத்தில் சூரியன், சந்திரன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் கூட்டாக அமர்ந்து இருந்தால் மாமனுக்குப் பாதிப்பு உண்டு.

 அதே நேரம் 5ம் இடத்தில் செவ்வாய் மட்டுமே தனித்து சுபப்பார்வை இல்லாமலிருந்தாலும் இதே நிலை மாமனுக்கு ஏற்படும்.

 அது மட்டுமல்ல தாய்மாமனைக் குறிக்கும் புதன் கிரகம் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் நீச்சம் பெற்று இருந்தாலும் ஜாதகத்தில் பகை பெற்ற கிரகங்களோடோ மாரகம் ஏற்படுத்தும் கிரகத்தோடோ சேர்ந்திருந்தால் மாமனுக்குக் கண்டம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.


ஆனாலும் இவைகள் பொதுவான விதிகள் தானே தவிர கட்டாயம் ஏற்பட்டே ஆகும் பலன்கள் என்று சொல்ல முடியாது.

 கட்டாயம் மாமனுக்குக் கண்டம் ஏற்படுமா ஏற்படாதா என்பதை ஜாதகக் கிரகங்களின் தன்மை, பார்வைகள், தசாபுத்தி, அந்தரம், ஆட்சி, உச்சம் இவைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டே சொல்ல முடியும்

. இது தவிர பொத்தாம் பொதுவாக மாலை சுற்றி குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது சாஸ்திர ஆதாரம் இல்லாத நம்பிக்கை ஆகும்



Contact Form

Name

Email *

Message *