Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதகம் பார்த்து திருமணம் செய்யலாமா...?

   ல்யாணம் கட்டி குழந்தை குட்டிகள் பெற்று வாழ்வதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்பது அனுபசாலிகளுக்கு நன்றாக தெரியும்

 கள்ளி செடியின் முள் குத்துகிறது என்பதற்காக எந்த ஒட்டகமாவது அதை விட்டு விடுமா? அதை போல தான் கஷ்டங்களும் துயரங்களும் நிறைந்ததாக இல்வாழ்க்கை இருந்தாலும் அதை பல பேர் விரும்பி ஏற்று கொள்கிறார்கள்

  சரியான வயதில் திருமணம் நடக்காதது பலருக்கு பெரிய குறையாகவே இருக்கிறது

  அவனுக்கு என்ன சார் வேலை இருக்கிறதோ இல்லையோ கல்யாணம் முடிந்து விட்டது வாழ்க்கையில் எப்படியோ ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான்


   நானும் தான் இருக்கிறேனே கைநிறைய சம்பாதிக்கிறேன் பார்ப்பதற்கும் ஒன்றும் மோசம் இல்லை இது வரை இருபத்தைந்து இடங்களில் ஏறி இறங்கி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டதோடு சரி

 பெண்ணுக்கு என்னை பிடித்தால் எனக்கு பிடிப்பதில்லை எனக்கு பிடித்தால் பெண்ணுக்கு பிடிப்பதில்லை எல்லாமே சேர்ந்து வந்தால் ஜாதகம் வரதட்ச்சனை என்று எதாவது ஒரு முட்டுக்கட்டை வந்துவிடுகிறது என அங்கலாயிப்பவர்களை தினசரி காண்கிறேன்

 எல்லாம் பொருந்தி வந்து அதாவது ஜாதகம் மற்றும் பொருளாதார அபிலாசைகள் நிறைவாகி திருமணம் முடிந்தால் உடனடியாக கணவன் மனைவிக்கிடையில் சின்ன சின்ன உரசல்கள் பெரிசாகி வீடே சாம்பலாகும் படி பற்றி கொள்கிறது

    வழக்கு பஞ்சாயத்து நீதிமன்றம் என்று ஏறி இறங்கி தங்களது ஈகோவை பெரிதாக்கி கொண்டு விவாகத்தை ரத்து செய்து விடுகிறார்கள் 


  பெண்ணும் பிள்ளையும் சம்பந்த பட்ட வீட்டு பெரியவர்கள் நல்லப்படியாக ஜாதக பொருத்தம் பார்த்து நல்ல நாளும் கிழமையும் பார்த்து தானே கல்யாணம் செய்து வைத்தோம் இப்படி இருவரும் சண்டி மாடுகளாக முட்டி மோதிக்கொள்கிறார்களே என அழுது புலம்புகிறார்கள்

 இன்றைய காலத்தில் இப்படி பட்ட அழுகையும் புலம்பலையும் தமிழக வீதிகள் முழுவதும் அடிக்கடி கேட்க்க முடிகிறது

   பொதுவாகவே இளைய தலைமுறையினருக்கும் முதியவர்களுக்கும் ஜாதகம் பார்த்து நடை பெரும் திருமணம் கூட சண்டையில் பிரிவில் போய் நிற்கிறதே பிறகு ஜாதகம் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன என்ற சந்தேகம் குழப்பம் சலிப்பு அவ்வப்போது உண்டாகி விடுகிறது

   நானும் பிரிந்த தம்பதிகள் பலரை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு கூட ஜாதக பொருத்தம் பார்த்து தான் திருமணம் ஆகியிருக்கிறது


  ஆனால் மணவாழ்க்கையை முறித்து கொண்டதோடு அல்லாமல் ஜென்ம விரோதிகளாகவே இருக்கிறார்கள்

   பின்னர் எதற்க்காக மணப்பொருத்தம் பார்த்து கால நேரத்தை வீணடித்து கொள்ளும் ஒரு வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்று சிந்திக்கும் போது ஒரு உண்மை தெளிவாகியது

   பொதுவாக பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் வந்து உடன் வரனின் ஜாதகத்தை எடுத்து கொண்டு ஜோதிடரிடம் செல்கிறோம் பெருவாரியான ஜோதிடர்கள் விவாக தசவித பொருத்தம் என்னும் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து விட்டு திருமணம் நடத்தலாம் அல்லது வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்

   நாமும் அதை நம்பி திருமணத்தை அவசரப்பட்டு நடத்தி விட்டு நிதானமாக கஷ்டப்படுகிறோம்

  அதன் பிறகு ஒரு பாவமும் அறியாத ஜோதிடத்தின் மீது காலம் முழுவதும் சேற்றை வாரி பூசும் பணியை செய்து வருகிறோம்


   உண்மையாக திருமண பொருத்தம் என்பது நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல அதையும் தாண்டிய பல விஷயங்களை ஆராய வேண்டும்

   முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்

   அதன் பிறகு ஆயுள் பாவமான எட்டாம் இடமும் களஷ்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்

   அடுத்ததாக பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்

    இது தவிர இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு லக்கிண அமைப்பு யோக அமைப்பு ஆகியவைகளும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்


  மேலும் இருவர் ஜாதகத்திலும் திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது

 இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்ததிற்கு வர வேண்டும்

 இதில் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

  அதன் பிறகே திருமணத்திற்கான அடுத்த கட்ட செயலை துவங்க வேண்டும்

 இன்னும் சிலர் மிருகசீரிஷம் மகம் சுவாதி அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்  பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என சொல்கிறார்கள்

 இது முற்றிலும் தவறுதலான நடைமுறையாகும் இந்த நட்ச்சதிரங்களில் பிறந்தவர்களுக்கும் நிச்சயம் நான் மேலை சொன்ன விஷயங்களை அவதானித்தே திருமணத்தை நடத்த வேண்டும்

 அப்படி செய்தால் இறைவன் அருளால் எல்லா திருமணங்களும் நல்லறம் வளர்க்கும் இல்லறமாக திகழும் இதில் சந்தேகம் இல்லை

Contact Form

Name

Email *

Message *