Store
  Store
  Store
  Store
  Store
  Store

தைரியமும் துணிச்சலும் உங்களுக்குத் தந்தது யார்?


    ல்லாத்தரப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறீர்கள் எழுதுகிறீர்கள் இந்த தைரியமும் துணிச்சலும் உங்களுக்குத் தந்தது யார்? சுறுக்கமாக கேட்டால் உங்கள் குருநாதர் யார்? 

                         சண்முக குமார்  ராணிமகாராஜபுரம் தூத்துக்குடி மாவட்டம்


  சாஸ்திரம் சாரீரம் மீமாம்ச தேவஸ்து பரமேஸ்வர!
    ஆச்சார்ய ராமகிருஷ்ணாய ஸந்துமே ஜன்ம ஜன்மனே!!

    ன்று வடமொழி ஸ்லோகம் ஒன்று உண்டு, அதாவது நான் கடைபிடிக்கும் தத்துவ வழி மீமாம்சம் என்றால் நான் வழிபடும் கடவுள் பரமேஸ்வரன் என்றால் எனக்கு வழிகாட்டும் குரு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றால் இந்த உலகில் எத்தனை ஜன்மங்கள் வேண்டுமென்றாலும் நான் பிறவி எடுப்பேன் என்பது இதன் பொருளாகும்,

   சூட்சமமாக எனக்கு என்றும் வழிகாட்டி வருவதும் என் மனதிலும் ஆத்மாவிலும் ஏன் என் உதிரத்தின் ஒவ்வொரு அணுவிலும் குருவாக நிறைந்து நிற்பது ராமகிருஷ்ணபரமஹமஸரே ஆகும், எனது சந்நியாச வாழ்வில் பல கோணங்களில் இன்றும் அவர் எனக்கு வழிகாட்டி வருகிறார்,

   என் உடல்குறையை காரணம் காட்டி சந்தியாச வாழ்வை தரமறுத்த சிலரை நான் சோகத்தோடு அடையாளம் கண்டு கொண்ட சூழலில் பசியால் அழும் குழந்தையை அரவணைத்து பசியாற்றும் தாயைப்போல் தக்க நேரத்தில் என்னிடம் வந்து சந்நியாச வாழ்வை எனக்கு வழங்கிய வள்ளல்களுக்கும் எல்லாம் வள்ளலான எனது மகாகுரு தேவர் ஸ்ரீ மத்ருத்ர பரமஹம்ஸரை நிர்குண குருவாக கொண்டிருக்கிறேன்,

    இந்த மகாபுருஷர்கள் இருவரை தவிர ஒவ்வொரு  துறையிலும் எனக்கு பல்வேறுபட்ட குருமார்கள் உண்டு, மேலும் இன்றும் கூட எனக்கு தெரியாத விஷயத்தை சொல்லும் கற்பிக்கும் எவரையும் எனது குருவாக மதிக்கிறேன்,

   ரயில்நிலையத்தில் சிறைவாழ்வின் அனுபவத்தை விவரித்த ஒரு சிறைப்பறவை முதல் பரகாயபிரவேச மார்க்கத்தையும் குண்டலினி பயிற்சி முறைகளையும் எனக்கு போதித்த மகா சித்தபுருஷர் ஊமையன் வரையிலும் ஏன் எனது சீடர்களை கூட சில நேரங்களில் எனது குருவாக கருதுகிறேன்,

   குரு என்பவர் இப்படித்தான் இருப்பார் இப்படித்தான் வருவார் என்று வரைமுறையெல்லாம் கிடையாது, நமது கண்களையும். காதுகளையும் விழிப்புடன் திறந்து வைத்தால் ஊர்ந்து செல்லும் கம்பளிபூச்சி முதல் பறந்து செல்லும் பறவை வரையில் நமக்கு பல விஷயங்களை போதிப்பதை உணரலாம்,

  போதிப்பவர் அனைவரும் குருமார்கள் தான் போதிப்பவரின் தகுதியை பார்க்காமல் போதிக்கப்படும் விஷயத்தையே பார்க்க வேண்டும் அது தான் ஆன்மா மற்றும் அறிவு பரிணாமத்திற்கு மூல வித்தாக அமையும்,




Contact Form

Name

Email *

Message *